
CAA சட்டம் – ரஜினிக்கு நன்றி சொன்ன இஸ்லாமிய தலைவர் !
சென்னை போயஸ் கார்டனில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்தார்.
பின்னர் அபுபக்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிஏஏ விவகாரம் தொடர்பாக ரஜினி கூறிய கருத்துக்கு நன்றி தெரிவித்தேன். ரஜினி கூறிய கருத்துக்கள் இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது
ரஜினிக்கு சிஏஏ பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது எதுவும் இல்லை. இந்திய பொருளாதாரம் சிறப்பாக வரவேண்டும் என்பதுதான் ரஜினியின் எண்ணம்.
மதக் கலவரம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய கடமை அனைவருக்குமே உண்டு. இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு வந்தால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று கூறியுள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறோம், நன்றி சொல்கிறோம். அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே சூப்பர் ஸ்டார் என கூறினார்.
