செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்!

 

 

விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்!

சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. அப்போது நடிகர் விஜய் சேதுபதி கலை இயக்குநர் சதீஷ் குமாருக்கு வாழ்த்துச் சொல்லி கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விஜய் தனக்கும் ஒரு முத்தம் வேண்டும் என்று விஜய் சேதுபதியிடம் கேட்க, அவருக்கு அன்பு முத்தமிட்டார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு முடியும் தருணத்தில் விஜய்யின் முகத்தை இரு கைகளாலும் பிடித்து விஜய் சேதுபதி அப்படியே விஜய் கன்னத்தில் முத்தம் பதிக்க சுற்றி இருந்த மாஸ்டர் படக்குழு கை தட்டி ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

இந்த முத்த விவகாரம் சில நாட்களுக்கு முன் நடந்திருந்தாலும் இப்போது தான் முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

770 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன