சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

கொரானா வைரஸ் பீதி ஏப்ரல் கடைசிக்கு தள்ளிப்போடப்பட்ட IPL கிரிக்கெட் போட்டி!

 

 

கொரானா வைரஸ் பீதி ஏப்ரல் கடைசிக்கு தள்ளிப்போடப்பட்ட IPL கிரிக்கெட் போட்டி!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் இந்த வைரசால் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர்.

தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியுள்ளது.

இதை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைபிடிக்க தொடங்கியுள்ளன.

முதற்கட்டமாக டெல்லி அரசு திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மக்கள் கூடும் மால்கள் போன்றவற்றை மூடியது.

இந்த சூழலில் டெல்லியில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கும் அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தது.

இதற்கிடையில் ஏப்ரல 15-ந்தேதி வரை அனைத்து நாட்டு விசாக்களுக்கும் மத்திய அரசு தடைவிதித்துள்ளதால் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஏப்ரல் 15-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐசிசி இதை தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி படுத்தி உள்ளது.

729 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன