வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

கொரானா தொற்றுநோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு… பலியானால் 4 லட்சம் நிவாரணம்!!

 

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக அறிவித்தது மத்திய அரசு

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.

அவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் கலபருகி பகுதியில் ஒரு முதியவர். டெல்லியை சேர்ந்த ஒரு மூதாட்டி என இதுவரை இந்தியாவில் இருவர் கொரோனா தாக்கத்துக்கு பலியாகியுள்ளனர்.

கேரளாவில் தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31வரை மூடப்பட்டன. தெலங்கானாவிலும் பொது மக்கள் கூடும் இடங்கள் மார்ச் 31வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மார்ச் 31வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக இன்று அறிவித்துள்ள மத்திய அரசு கொரோனா பாதிப்பால் இறப்பவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணத்தொகையாக 4 லட்சம் ரூபாய்  வழங்கவும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

பேரிடர்களை எதிர்கொள்ளும் செலவினங்களுக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து பயனாளிகளுக்கு எவ்வளவு தொகை வழங்கலாம்? என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

848 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன