வெள்ளிக்கிழமை, மே 17
Shadow

டிவிட்டர் கோஷ்டியின் பொய் பதிவால் சர்ச்சையில் மீண்டும் சிக்கிய மாஸ்டர் விஜய்!

 

 

பேசாத ஒன்றை பேசுயதாக பதிவு செய்து விஜய்யை மீண்டும் சிக்க வைத்த டிவிட்டர் கோஷ்டி!

தமிழ் சினிமாவை கடந்த சில ஆண்டுகளாக உயிர்க்கொல்லி நோய் போல கூடவே இருந்து மெல்ல அழித்து வருபவர்கள் சமூக வலைதள கோஷ்டிகள்.

இவர்களில் மிக முக்கியமானவர்கள் டிவிட்டர் கோஷ்டிதான். அதிலும் விஜய்யை தொடர்ந்து ரெய்டு சிக்கலில் வைத்து இன்றளவும் மன நிமமதியை கெடுத்ததும் இந்த குருவி செய்தி கோஷ்டிதான்.

ஒரு கூட்டமாக சேர்ந்து கொண்டு இல்லாத ஒரு செய்தியை மிகைப்படுத்தி “பிட்” பதிவாக போட்டு பரப்பி விடுவதில் இந்த டிவிட்டர் கோஷ்டிகளுக்கு நிகர் அவர்களே.

தமிழ் சினிமாவின் சாபக்கேடு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை தான். அதை பயன்படுத்தி கடைசி நேரத்தில் பல லட்சங்களை வாங்கிகொண்டு இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு தன் வங்கிக் கணக்கை உயர்த்தி கொள்ளும் டிவிட்டர் புரொமோஷன் கோஷ்டிகளால் இதுவரை ஒரு தமிழ் படமும் வெற்றி பெற்றதாக வரலாறே இல்லை. அதே நேரம் இந்த மோச்டி டிவிட்டர் புரொமோஷன் ஏஜென்சிகளின் எந்த தகவலும் தாம்பரத்தை தாண்டி சினிமா ரசிகனை சென்றடைவதில்லை. இந்த உண்மை தெரிந்தாலும் இந்த பிராடு ஏஜென்சிகளின் கேப்மாரி பொய் வாக்குறுதியை நம்பி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏமாந்து வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்… ஏற்கனவே பிகில் பட வியாபார விஷய்த்தை இதுபோன்ற கேப்மாரி டிவிட்டர் கோஷ்டிகள் தவறாக பதிவுகள் செய்து விஜய்யை வருமானவரித்துறை ரெய்டில் சிக்க வைத்தனர் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்.

இப்போது மீண்டும் விஜய் பேசாத ஒரு கருத்தை அவர் பேசியதாக ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டதால் மீண்டும் விஜய் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சமீபத்தில் நடந்த மாஸ்டர் ஆடியோ விழாவில் பத்திரிகையாளர்களுக்கு கூட அனுமதி இல்லை. ஆனால் சில டிவிட்டர் கோஷ்டிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இப்போது வினையே அப்படி அழைக்கப்பட்ட டிவிட்டர் ஆசாமிதான் விஜய் பேசாத ஒரு கருத்தை அவர் பேசியதாக பதிவிட அது பல சர்ச்சைகளுக்கு வழி வகுத்தது.

ஏற்கனவே ரெய்டு சிக்கலில் மனம் நொந்து போய் மன உளைச்சல் அடைந்துள்ள விஜய்க்கு டிவிட்டர் கோஷ்டியின் இந்த பொய் பிரச்சாரம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

அப்படி விஜய் கோபம அடையும் அளவுக்கு அப்படி என்ன பதிவு எனகிறீர்களா , மத்திய அரசின் குடியுரிமை சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விஜய் பேசியதாக பதிவு போட்டால் கோபம் வர்த்தானே செய்யும்.

அந்த பதிவை போட்ட ஈசிஆர் சரவணன் உடனடியாக அந்த பதிவை நீக்கி விட்டாலும் ஸ்கிரீன் ஷார்ட்டாக மாறி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மீண்டும் பொய்யான டிவிட்டர் பதிவால் விஜய்யை சிக்க வைத்த சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

699 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன