
உலகம் முழுதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்துக்கு ஹாலிவுட் நடிகையும், நடிகர் ஒருவரும் தப்பவில்லை.
குவாண்டம் ஆப் சோலஸ், டாம் குரூஸ் நடித்த
ஒபிலிவியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஓல்கா குரிலென்கோ.
இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே போல் சூப்பர் ஹீரோ படங்களான ‘தோர்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் இர்டிட்ரிஸ் எல்பா தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கான மருத்துவ சிகிச்சைகள் எடுத்து வருவதாகவும் கூறியிக்கிறார்கள். இதையடுத்து ஹாலிவுட் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது.
கண்ணுக்கு தெரிந்த எதிரியை எப்படியும் சமாளித்து விடலாம் கண்ணுக்குத் தெரியாத இது போன்ற வைரஸ் தாக்கத்தை எப்படி தடுப்பது.
