வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வெளிநாட்டு விமான சேவைக்கு தடை!

 

கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வெளிநாட்டு விமான சேவைக்கு தடை!

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன்மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 174 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாக கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவுவதால், மார்ச் 22ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சர்வதேச பயணிகள் விமானங்கள் வர தடை மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மேலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அவசர, அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற வேண்டும், அரசு அலுவலகங்களில் வேலை நேரத்தை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும், விளையாட்டு போட்டிகள், பொது நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க வேண்டும் என்பது போன்ற அறிவுறுத்தல்களையும் மத்திய அரசு வழங்கி உள்ளது.

286 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன