சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

சூடு பிடிக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்… டி.சிவா தலைமையில் அணி அறிவிப்பு

 

 

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி பெரும் வெற்றி பெற்றது.

முதன் முறையாக பிரபலமான நடிகர்கள் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்துக்கு வந்தார்கள்.

அவர்களுடைய பதவி காலத்தில் சின்ன சின்ன கருத்து முரண்பாடுகள் காரணமாக அந்த அணியில் பதவி வகித்த கே.ஈ.ஞானவேல்ராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் சிலர் ராஜினாமா செய்து வெளியேறினார்.

இந்த சூழலில் விஷால் தலைமையிலான அணியின் இரண்டு வருட பதவிக்காலம் முடிவதற்கு முன்பே திடீரென கலைக்கப்பட்டு, தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசால் ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார்.

பிறகு இந்த சிறப்பு அலுவலரால் ஒரு தற்காலிக கமிட்டி உருவாக்கப்பட்டு அதில் பாரதிராஜா, டி.சிவா, ஜே.எஸ்.கே.சதீஷ், டி.டி.ஜி.தியாகராஜன், கே.ராஜன், எஸ்.வி.சேகர் மற்றும் சிலர் அதில் அங்கம் வகித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம், அந்த தற்காலிக கமிட்டியை கலைத்து, 2020 மே மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என பதிவுத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே சங்க தேர்தல் பரபரப்பும், அணி சேர்க்கையும் என பரபரப்பு தொற்றிக் கொண்டது.

மூத்த தயாரிப்பாளர்களின் அலுவலகங்களில் ரகசிய கூட்டங்கள் நடக்க ஆரம்பித்தன.


இந்த சூழலில் தயரிப்பாளர் சங்க தேர்தலில் தயரிப்பாளர் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தலைமையில் ஒரு அணி உருவாகியுள்ளது. அந்த அணியின் வேட்பாளர்கள் பட்டியல் அந்த அணியினரால் வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் பட்டியல் விவரம் கீழே வருமாறு:

T. சிவா – தலைவர்
K. முரளிதரன்(LMM) – பொருளாளர்
PL. தேனப்பன் – செயலாளர்
JSK. சதிஷ் குமார் – செயலாளர்
RK. சுரேஷ் – துணை தலைவர்
G. தனஞ்செயன் – துணை தலைவர்
செயற்குழு உறுப்பினர்கள்:
K. ராஜன்
ராதாரவி
K.S. ஸ்ரீனிவாசன்
சித்ரா லக்ஷ்மணன்
H. முரளி
SS. துரைராஜ்
K. விஜயகுமார்
RV. உதயகுமார்
மனோஜ் குமார்
S. நந்தகோபால்
மனோபாலா
பாபு கணேஷ்
பஞ்சு சுப்பு
M.S. முருகராஜ்
வினோத் குமார்
ரங்கநாதன்
பஞ்ச் பரத்
மதுரை செல்வம் மற்றும் மூன்று தயாரிப்பாளர்கள்.

டி.சிவா தலைமையிலான அணியை தவிர்த்து, டி.டி.ஜி.தியாகராஜன் தலைமையில் ஒரு அணி, ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணி மற்றும் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது

750 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன