வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு – சட்டசபையில் துரைமுருகன் பேச்சு

 

 

கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு – சட்டசபையில் துரைமுருகன் பேச்சு

கொரோனாவால், டாஸ்மாக்கும் மூடப்படவில்லை, சட்ட சபையும் மூடப்படவில்லை என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறி இருக்கிறார்.
உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்து கடும் பீதியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

சுமார் 140 பேர்களுக்கு வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரானா பாதிப்பால் இதுவரை இந்தியாவில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

இதையடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே  வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கல்வி நிலையங்கள், டாஸ்மாக் பார்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன.

இந் நிலையில் கொரோனா பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் இன்று பேசும் போது,

“கொரோனா நாட்டையே புரட்டிப்போட்டுவிட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில், பள்ளிகள், வணிக இடங்கள், ஹோட்டல்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

ஆனால், சட்டசபையும், டாஸ்மாக் கடைகள் மட்டும் மூடப்படவில்லை.
கொரோனாவால் வியாபாரம் முடங்கியதால் சிறு வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய வியாபாரிகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி செலுத்துவதில் இருந்து 6 மாதங்கள் விலக்கு தர வேண்டும் என்று பேசினார்.

அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசியதாவது: கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படவில்லை. தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படவில்லை என்றார்.

618 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன