வியாழக்கிழமை, மே 16
Shadow

கொரானா முன்னெச்சரிக்கை 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் – பிரதமர் மோடி

 

 

கொரானா முன்னெச்சரிக்கை 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9/மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் – பிரதமர் மோடி

உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும் பதட்டத்ததையும் ஏற்படுத்தி உள்ள கொரானா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவிலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவை மார்ச் 31வரை மூடப்பட்டு உத்தவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றிய போது கூறியது:

கொரானா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

அவசியம் இல்லாமல் வெளியில் செல்வதை மக்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்.

ஒரு வகையில் கொரானா கொடிய நோய் உலகப்போரைவிட மிக மோசமானது.

கொரானாவால் பொருளாதாரம் பெருமளவு சேதமடைந்து உள்ளது.

சில நாடுகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தன அதனால் நோய் கட்டுக்குள் வந்து விட்டது.

மக்கள் நம்மை நாமே தனிமை படுத்தி கொள்ள வேண்டும்.
கொரானா பரவலை தடுக்க 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் உடனடி சாத்தியம் இல்லை. ஆனாலும் மக்கள் சுயகட்டுப்பாடு கடை பிடிக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம்.

அவசியம் இன்றி மருத்துவமனைக்கு போக வேண்டாம்.

574 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன