
கொரானா தாக்குதலில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் !
உலகை அச்சத்தில் ஆழ்த்தி பல்லாயிரக்கணக்கான மக்களை பலி வாங்கி வரும் கொரானா வைரஸ் பாதிப்பில் அடித்தட்டு மக்கள் தொடங்கி அரச குடும்பத்தினர் வரை சிக்கியுள்ளனர்.
சீனாவில் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தி இன்று உலகம் முழுதும் வேகமாக பரவி வரும் கொரானா வைரசை கட்டுப்படுத்த பல முயற்சிகள் செய்து வருகிறார்கள்.
இங்கிலாந்து அரசி எலிசபெத் ஏற்கனவே தனிமைபடுத்தப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இளவரசர் சார்லசுக்கு கொரானா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அரச குடும்பத்தில் கொரானா தொற்று கண்டறியப்பட்டதால் இங்கிலாந்து மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
488 Views
