வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

21 நாள் தொடர் ஊரடங்கு உத்தரவிட்ட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கமல்.

 

 

21 நாள் தொடர் ஊரடங்கு உத்தரவிட்ட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கமல்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு மக்கள் வெளியேறாமல் தனிமையில் இருப்பதுதான்.
ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என மோடி கூறியிருக்கிறார்.

இதற்கு இந்திய மக்கள்
அனைவரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது…
உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க.
பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே.
அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம். என கமல் பதிவிட்டுள்ளார்.

கமலின் இந்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. தொற்று தடுப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கமல் விமர்சிப்பது சரியா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.

 

509 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன