வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

இதிலும் டூப்ளிகேட்… கொரானா பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவிகள் அனுப்பியதில் சீனாவின் மோசடி – அதிர்ச்சியில் ஸ்பெயின், செக் குடியரசு

 

 

கொரானா பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவிகள் அனுப்பியதில் சீனாவின் மோசடி – அதிர்ச்சியில் ஸ்பெயின், செக் குடியரசு

உலகம் முழுவதும் பல லட்சம் மக்களை பாதித்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த கொரானா வைரஸ் பிறப்பிடம் சீனா. அங்குள்ள ஹூஹான் மாகாணத்தில் தான் இந்த கொடூர உயிர்க்கொல்லி வைரஸ் உருவாகி இன்று உலகம் முழுதும் பரவி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

உலகத்தின் பல நாடுகளின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் தடை பட்டு உள்ளது.

சாதாரண சாமானியன் முதல் இங்கிலாந்து இளவரசர் சார்லசு, பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் என அந்தஸ்து பார்க்காமல் தாக்கி உள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்தை கண்டறிய ஸ்பெயின், செக் குடியரசு நாடுகள் கடந்த மாத துவக்கத்தில் சீனாவிடம் இருந்து பல பில்லியன் மதிப்பில் கொரானா வைரஸ் பாதிப்பை கண்டறியும் கருவிகளை வாங்கியது.

அப்படி பல பில்லியன் மதிப்பில் வாங்கப்பட்ட 90 சதவீத கருவிகள் வேலை செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் ஸ்பெயின், செக் குடியரசு நாடுகளில் வெளியாகும் பல ஊடகங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

சீனா திட்டமிட்டே தவறான கருவிகளை கொடுத்து மோசடி செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கொரானா பாதிப்பில் இறப்பவர்கள் விகிதம் நாளுக்கு நாள் ஸ்பெயின், செக் குடியரசில் அதிகரிப்பதாலும் சீனாவின் மோசடியான கருவிகளாலும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செயல்படாத பரிசோதனை கருவிகளை சீனாவிற்கே திருப்பி அனுப்பி வைக்க ஸ்பெயின் நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அந்த கருவிகள், 10லிருந்து 15 நிமிடங்களுக்குள் கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை கூறிவிடும் என்பதால் அவை வாங்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், அதனை பயன்படுத்திய ஸ்பெயின் நாட்டு சுகாதாரத்துறையினர், அந்த கருவிகள் சரியாக செயல்படவில்லை எனவும் 10% மட்டுமே சரியாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து, அதனை சீனாவிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்பெயினில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் தெரிவிக்கையில், “அங்கீகரிக்கப்படாத நிறுவனத்திடம் இருந்து கரோனா பரிசோதனை கருவிகளை வாங்கியுள்ளனர். அதனால்தான் இந்த பிரச்சனை” என்று கூறியுள்ளார்கள்.

இதுகுறித்து ஸ்பெயின் நாட்டு சுகாதாரத்துறையினர் தரப்பில் ” சீனாவில் இருந்து நேரடியாக அவர்கள் வாங்கவில்லை எனவும் ஸ்பெயினில் உள்ள சீன நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகவும் தெரிவித்தனர். மேலும், அந்த நிறுவனம் சீனாவுடையது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்கள்.

இந்த விவரம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

789 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன