வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

கொரானா பாதித்தவர்களுக்காக தயாரான ரயில் பெட்டி ஆஸ்பத்திரி..!

 

கொரானா பாதித்தவர்களுக்காக தயாரான ரயில் பெட்டி ஆஸ்பத்திரி..!

ரயில் பெட்டிகளை தனித்தனி வார்டுகளாக மாற்றி கொரானா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இரயில்வே முடிவு செய்தது.

கரோனா வைரஸ் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில்வேத்துறை சார்பில் ரயில் பெட்டிகளை தனித்தனி வார்டுகளாக மாற்றும் பணி கடந்த சில நாட்களாக பரபரபரப்பாக நடந்துவந்தது. இப்போது அந்த பணி நிறைவடைந்துள்ளது.

கரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதை அடுத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் மட்டும் போதாது என்பதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.

இதை அடுத்தே ரயில்வேத்துறை சார்பில் ஏசி வசதி இல்லாத பெட்டிகளை தனித்தனி வார்டுகளாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்போது அந்த பணி முடிவடைந்துள்ள நிலையில், ஆய்வுக்குப் பின் பயன்பாடுக்கு வரும் என தெரிகிறது. ஒவ்வொரு ரயில்வே மண்டலமும் வாரத்துக்கு 10 ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்றும் பணியைத் தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அடுத்து நாடு மூழ்வதும் 13,523 ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன. இந்த ரயில்களில் சிலவற்றை கொரானா வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்த பயன்படுத்தும் முயற்சியில் ரயில்வேத்துறை ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக்குமார், ஒவ்வொரு பெட்டிக்கும் 10 தனித்தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், ஒரு பெட்டிக்கு 4 கழிப்பறைகளும், 2 குளியல் அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவர் அறை, மருந்து அறை, கேன்டீன் உள்ளிட்ட அறைகளும் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

உயிர்க்கொல்லி நோயான கொரானாவை விரட்ட ஒரே வழி வீடுகளில் தனித்திருப்பது மட்டுமே. இந்த நோயின் தீவிரம் கருதியே இந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இதை வைத்தே கொரானாவின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளலாம்.

615 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன