வியாழக்கிழமை, செப்டம்பர் 3
Shadow

ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் – முதல்வர் பழனிச்சாமி

 

 

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் – முதல்வர் பழனிச்சாமி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியது:

தமிழகத்தில் நேற்று இரவு வரை 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் விவரம் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டோம். தாங்களாகவே முன் வந்து தகவல் அளித்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அக்கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்துவோம்.

ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு நீட்டிப்பது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்றார்.

564 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன