வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

8ம் தேதி பிரதமர் மோடியின் அனைத்து கட்சி வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு!

 

 

 

8ம் தேதி பிரதமர் மோடியின் அனைத்து கட்சி வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு!

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் மாநில முதல்-மந்திரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 8- ந் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பாராளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்கிறார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்தும், நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள சூழ் நிலைகள் குறித்தும் அவர் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கிறார்.

மோடி அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.

இதை அந்த கட்சியின் எம்.பி.க்கள் குழு தலைவர்கள் சுதீப் பாண்டோபதாய் ( மக்களவை) , டெரிக் ஓ பிரையன் (மேல்சபை) பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது;-
சமூக விலகல் அவசியம் என்பதால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டதை இந்த அரசு செவிசாய்க்கவில்லை.

இதனால் கடைசி 2 நாள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை. பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் கூறிய கருத்துக்கள் மதிக்கப்பட வில்லை. இதனால் பிரதமர் அழைப்பு விடுத்துள்ள இந்த கூட்டத்துக்கு எந்த ஒரு அவசியமும் இல்லை. எனவே இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

664 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன