புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

திமுகவை கூட்டத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

 

 

திமுகவை கூட்டத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், வருகிற 8ந்தேதி புதன்கிழமை காலையில் நாடு முழுதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

பாராளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் இருக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் புதன்கிழமை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதை தொடர்ந்து எழுந்துள்ள அசாதாரணமான சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கவும் எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்தை கேட்கவும் திட்டம்.


இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம், தொலைபேசியில் பேசி உடல்நலம் விசாரித்த பிரதமர் மோடி, தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி கேட்டு கொண்டார்.

இதனை அடுத்து, இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு கலந்து கொள்வார் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

545 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன