புதன்கிழமை, செப்டம்பர் 16
Shadow

மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினி… குத்துவிளக்கேற்றிய மோடி..!

 

பிரதமர் மோடியின் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இரவு சரியாக 9 மணிக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகள் மெழுகுவர்த்திகள் மற்றும் டார்ச் லைட்டுகளை மக்கள் ஏற்றினர்.

இதனால் தமிழகம் முழுவதும் மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிர்ந்தது. மேலும் தமிழகத்தை பொருத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நயன்தாரா உட்பட பல பிரமுகர்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றினார்கள்.

பிரதமர் மோடி தன் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றினார். இந்திய பிரபலங்கள் ரத்தன் டாடா, சச்சின், சிரஞ்சீவி உட்பட பலரும் இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன