
சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் அளித்த “மாநாடு” தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பார்வதி நாயர்!
கொரோனாவால் உலகமே தன் இயல்பான வாழ்க்கையை நிறுத்திக் கொண்டு அவரவர் வீடுகளில் அடைந்து கிடக்கிறோம்.
மக்களை மகிழ்விக்கும் திரைத்துறை தொழிலாளர்கள் பலரும் கடுமையான வாழ்வாதார சிக்கலில் அவதி படுகிறார்கள்.
அவர்களுக்கு உதவி செய்ய திரையுலகில் பலரும் பெப்சிக்கு உதவி வருகிறார்கள்.
சினிமா பெப்சி தொழிளாளர்களின் குடும்பங்கள் இந்த வேலையில்லாத நாட்களைக் கடந்து வர சிறு உதவியாக 50 அரிசி மூட்டைகளை (25 கிலோ) ஃபெப்சிக்கு வழங்கினார்
“மாநாடு” தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி .
அதே போல நடிகை பார்வதி நாயரும் 1500 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கினார்.
நேற்று நடிகர் சூரி, இயக்குனர் பாரதிராஜா ஆகியோரும் அரிசி மூட்டைகளை வழங்கினார்கள்.
1,633 Views
