வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஊழியர்கள்!

 

 

சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிரிட்டிஷ் பிரதமரை கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஊழியர்கள்!

கொரானா வைரஸ் பாதிப்பில் உலக தலைவர்களில் சிக்கியவர் பிரிட்டிஷ் பிரதமர் போரீஸ் ஜான்சன்.

கடந்த வாரம் முழுதும் தனிமைப்படுத்தி வீட்டில் சிகிச்சை எடுத்தவர் உடல் நிலை சிக்கலானதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதால் பிரிட்டிஷ் முழுதும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. உலக தலைவர்கள் பலரும் போரீஸ் ஜான்சன் நலம் பெற அனைத்து மருத்துவ உதவிகளும் செய்ய காத்திருப்பதாக அறிவித்தார்கள்.

இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த போரீஸ் ஜான்சன் உடல் நலம் சற்று தேறியதால் ஐசியூ வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு ஜான்சன் மாற்றப்பட்டார்.

அப்படி அவரை ஸ்டச்சரில் வைத்து ஆஸ்பத்திரி ஊழியர் தள்ளி வரும்போது மற்ற ஊழியர்கள் கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

லண்டன் பிரதமர் உடல் நிலை முன்னேற்றம் அடைந்ததால் பிரிட்டிஷ் நகர மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

465 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன