
கொரானா பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடஙகை மேலும் நீடிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடந்தது.
இந்நிலையில், தலைமை செயலாளர் சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகளுக்கு பாராட்டும், நன்றியும் தமிழக அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
795 Views
