ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

பொதுமக்களின் கேள்விகளுக்கு உடனடி பதில் போட்டு டிவிட்டரில் அசத்தும் முதல்வர் EPS

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டிவிட்டர் அரசியல்.

 

கமல்ஹாசன் அரசியல் கட்சி அறிவிப்பு செய்த நேரத்தில் தனது கருத்துக்களை டிவிட்டர் என அழைக்கப்படும் சமூக வலைதள பக்கத்தில்தான் பதிவிடுவார்.
அதனால் அவரை டிவிட்டர் அரசியல்வாதி என்றே விமர்சனங்கள் செய்தார்கள். பின்னர் கமல் பதிவுகள் குறைந்துவிட்டது.

இப்ப கொரானா காலம்… இப்ப டிவிட்டர் பதிவுகளில் பட்டையை கிளப்பி அதிரடி அரசியல் செய்து வருவது தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

அதிலும், கொரானா தடுப்பு நடவடிக்கைகள் ஒரு பக்கம் எதிர்க் கட்சிகளின் விமர்சனங்கள் இன்னொரு பக்கம் தன் கட்சியிலேயே ஏற்படும் இடர்கள் என பலவகையான பணிகளில் பரபரப்பாக பணியாற்றி வருகிறார்.

இத்தனை பணிகளுக்கு மத்தியில் அவரது டிவிட்டர் பக்கத்தில் பொது மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் பதில் அளித்து அசத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

முதல்வரின் இந்த அணுகுமுறை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.

655 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன