சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

கிருமி நாசினி தெளிக்க மருத்துவ கவச உடை அணிந்து பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கிறரா நடிகை ரோஜா எம்.எல்.ஏ.?

 

 

பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கும் திருமதி ரோஜா எம்.எல்.ஏ.

நகரி தொகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக ஊர் முழுதும் கிருமி நாசினி திரவம் தெளிக்கும் பணியை அந்த தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா தொடங்கி வைத்தார்.

போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் கவச உடை அணிந்து கையில் கிருமி நாசினி பைப்பை பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் முடிந்ததும்… அப்படியே நாலு வீட்டுக்கு மருந்தடிச்சமாதிரி ஒரு வீடியோ எடுத்து அதை பப்ளிசிட்டிக்கு கொடுத்து விட்டு அப்பாடா கொரானாவை தடுக்கும் பணியை முடித்து விட்ட திருப்தியில் எம்.எல்.ஏ. அங்கிருந்து கிளம்பி விட்டாராம்.

இந்த பதிவை படித்ததும் பலருக்கு எம்.எல்.ஏ. அவரே களத்தில் இறங்கி செயல்பட்டதை கொச்சைப் படுத்துவது போல தோன்றும்.

அப்படி யோசிக்கிறவர்கள் ஒரு நிமிடம் இதையும் படியுங்கள்…

இதை ஏன் பப்ளிசிட்டி என்றேன்… நடிகை ரோஜா எம்.எல்.ஏ. கிருமி நாசினி தெளிக்கும் பணியை செய்ததை வரவேற்கும் அதே நேரம்… அப்போது அவர் அணிந்த நீல நிற கவச உடை மருத்துவ பணியாளர்கள் கொரானா வார்டில் பணியாற்றுகிறவர்கள் பயன்படுத்தும் உடை.

சரி உடை விஷயத்தை கூட விட்டு விடலாம்…

அவரோடு அந்த பணியில் கூட இருக்கும் பலரும் முக கவசம் கூட அணியவில்லை… கையுறை இல்லை.கொரானாஅரசியல் க்கள் பணியாளராக இருந்திருந்தால் அவரோடு பணியில் இருந்த அனைவருக்கும் அதே போன்ற மருத்துவ உடையை கொடுத்திருக்க வேண்டும்.

பாதுகாப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது.

அதை செய்ய தவறியதால்தான் இதை “பப்ளிசிட்டி ஸ்டண்ட்” என்று குறிப்பிட வேண்டி உள்ளது.

எது எப்படியோ கொரானாவை வைத்து அரசியல் பன்னாமல் அதை ஒழித்தால் சரி…

– கோடங்கி

#ரோஜாபப்ளிசிட்டி #கொரானாஅரசியல்

1,051 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன