வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

அமெரிக்காவில் தொடர்ந்து ஆயிரங்களில் உயிர்பலி வாங்கி கோர தாண்டவம் ஆடும் கொரானா!

 

 

அமெரிக்காவில் தொடர்ந்து ஆயிரங்களில் உயிர்பலி வாங்கி கோர தாண்டவம் ஆடும் கொரானா!

உலகம் முழுவதும் 21 லட்சத்து 81 ஆயிரத்து 43 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5 லட்சத்து 47 ஆயிரத்து 14 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 457 பேர் பலியாகியுள்ளனர்.

கொரானா சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அமெரிக்காவில் வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 482 பேருக்கு கொரானா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 29 ஆயிரத்து 479 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 165 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரானாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 608 ஆக அதிகரித்துள்ளது.

இப்படி தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றால் பலியாவதை தடுக்க முடியாமல் உலக வல்லரசான அமெரிக்கா செய்வதறியாது திணறி வருகிறது.

368 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன