வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்குவதற்கு ‘ஆரோக்கியம்’ என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்!

 

 

நோய் எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு, கபசுர குடிநீர் அருந்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் திட்டமாக ‘ஆரோக்கியம்’ என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் தொடங்கி வைத்து கபசுர குடிநீர் பாக்கெட்டுகளை வழங்கினார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி கபசுர குடிநீரை வழங்கினார்.

கொரானாவை தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம். நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரானாவுக்கு மருந்து அல்ல; எதிர்ப்பு சக்திக்காக மட்டுமே என்று தமிழக அரசு விளக்கியுள்ளது.

சென்னையில் கொரானா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வீடு வீடாக கபசுரக் குடிநீர் சூரணப் பொட்டலங்கள் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது

601 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன