திங்கட்கிழமை, ஆகஸ்ட் 24
Shadow

தனி மனித இடைவெளியில் 100 நாள் வேலை திட்டத்தை தொடங்கலாம் – அரசு அறிவிப்பு

 

 

தனி மனித இடைவெளியில் 100 நாள் வேலை திட்டத்தை தொடங்கலாம் – அரசு அறிவிப்பு

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது:

மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்.

100 நாள் வேலை திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் தனி மனித இடைவெளியுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.


நீர்ப்பாசனம், அணைகள், சாலைகள், செங்கல் சூளை, குடிநீர் வினியோகம், தூய்மை பணிகள், மின்சார பணிகள்  ஆகியவற்றை  மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அனுமதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

514 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன