
பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் எப்போதும் தூக்கிப் பிடித்து ஆதரவு கோஷம் போடும் முதல் நபர் அர்னாப் கோஸ்வாமி.
எதிர்க் கட்சியினரை எதிரி கட்சியாக பாவித்து தனது டிவியில் செய்தி வெளியிடுவது அர்னாப்பின் வழக்கம்.
நேற்றிரவு தான் இளைஞர் காங்கிரஸ் ஊழியர்களால் தாக்கப்பட்டதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் மற்றும் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி குற்றம் சாட்டிய, நிலையில், இது அர்னாப் மீது அர்னாபே நடத்திய ‘செட் அப்’ தாக்குதல் என்று ரவி நாயர் என்ற பத்திரிகையாளர் சொல்லி இருப்பது சமூக வலைதளங்கங்களில் ட்ரெண்டிங்காகி வருது.
அர்னாப், அவரது மனைவி மற்றும் தொலைக்காட்சி ஆசிரியர் சாமியபிரதா ரே ஆகியோர் காரில் நேற்று இரவு தங்களின் ஸ்டுடியோவில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அர்னாப் வெளியிட்ட வீடியோவில் காங்கிரஸ் தலைவர்களை இந்த தாக்குதலுக்கு குற்றம் சாட்டியுள்ளார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை “கோழை” என்று கடுமையாக வசைமாரி பொழிந்துள்ளார்.
இந்நிலையில், இது அர்னாப் மீது அர்னாபே நடத்திய ‘செட் அப்’ தாக்குதல் என்று ரவி நாயர் என்ற பத்திரிகையாளர் ஒரு பதிவு வெளியிட அது இணையத்தில் மிக வேகமாக பரவி அர்னாப் செட்டப் விவகாரத்தை அம்பலப்படுத்தி உள்ளது.
அப்படி அந்த பதிவில் என்ன சொல்லியிருந்தா ரவி “”அர்னாப் தனது வீடியோவில் நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் இரண்டு பேர் தன்னை தாக்கியதாக ஆவேசமாக கூறுகிறார். அதாவது அவர் கூற்றுப்படி, இன்று 23 ஆம் தேதி விடியும் முன்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஆனால் அவர் பேசும் வீடியோவில் பதிவாகியுள்ள Metadata படி அந்த வீடியோ எடுக்கப்பட்ட நேரம் நேற்று 20:17 மணி ஆகும். அதாவது 22 ஆம் தேதி முன்னிரவு 8:17 மணிக்கு, தன் மீதான தாக்குதலுக்கு சோனியா காந்தியை குற்றம்சாட்டி அவர் ஆவேசமாக பேசிய வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அப்படியிருக்க இரவு 12.15 மணிக்கு எப்படி தாக்குதல் நடந்திருக்கும்.
எனவே இது அர்னாப் மீது அர்னாப் நடத்திக் கொண்ட செட் அப் தாக்குதல் என்பது வெளிப்படியாக் தெரிகிறது” அப்படீன்னு சொல்லி இருப்பது பலராலும் பகிரப்பட்டு வருது.
அதிலும் அர்னாப் கோஸ்வாமிக்கு ஏற்கனவே 2 போலீசார் எப்போதும் பாதுகாப்புக்கு உடன் இருப்பார்கள். அப்படியே யாராவது தாக்கி இருந்தால் அந்த பாதுகாப்பு போலீசார் தாக்கியவர்களை ஏன் பிடிக்கவில்லை.

அதோடு, பாஜக அரசின் இந்த ஊரடங்கால் பல கோடி மக்கள் பிரதமர் மோடி மீதும் பாஜக அரசின் மீதும் மிக கோபத்தில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியிருந்தார். சோனியாவை கடுமையாக விமர்சித்து தனது டிவியில் செய்தி வெளியிட்டிருந்தார் அர்னாப்.
அதை காரணம் காட்டி பாஜக மக்கள் வெறுப்பை திசை திருப்ப தன்னை தாக்கியது காங்கிரஸ் கட்சியினர்தான் என்று செட்டப் தாக்குதல் நடத்தி இருக்கிறார் அர்னாப் கோஸ்வாமி என்கிறார்கள் அர்னாப்பை அறிந்தவர்கள்.
கெட்டப்பை மாத்தி செட்டப்பை செஞ்சாலும் கொண்டைய மறந்துட்டியே பாடிஸ்டோடான்னு வடிவேலு பட காமெடிதான் நினைவுக்கு வருது!
