செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

சமூக இடைவெளிக்கு “இது” அவசியம் ” கேரள அரசு புதுமுயற்சி

 

சமூக இடைவெளிக்கு “இது” அவசியம் ” கேரள அரசு புதுமுயற்சி

கொரானா வைரஸ் தொற்று இந்தியாவில் முதன்முதலாக கேரளா மாநிலத்தில்தான் கண்டறியப்பட்டது. அதேபோல் தொடக்கக்காலத்தில் கேரளாவில்தான் கொரானா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடித்தல், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பை கண்டறிதல், பரிசோதனையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டு கொரானாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் நோயாளிகளை குணப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்வதிலும் முதன்மை மாநிலமாக கேரளா செயல்படுகிறது.


கொரானா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் முற்றிலுமாக ஒழிக்க நீண்ட காலம் ஆகும் என கூறப்படுகிறது.

இதனால் மக்கள் வெளியில் சென்றால் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது.

இந்த சூழலில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு ஒரு யோசனை தென்பட்டது.

அதன்படி அங்குள்ள மக்கள் வெளியே சென்றால் கட்டாயம் குடை கொண்டு செல்ல வேண்டும். குடையை பயன்படுத்தும்போது இரண்டு குடைகள் ஒன்றோடு ஒன்று இடிக்காமல் விரிக்கப்பட்டிருக்கும்போது எப்படியும் ஒரு மீட்டர் இடைவெளி உண்டாகும். இதனால் தானாகவே இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதாகிவிடும். இப்படி செய்தால் மக்கள் தானாகவே சமூக இடைவெளியை பின்பற்ற தொடங்கி விடுவார்கள் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

449 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன