செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

கடந்த 6 ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு பிஜேபி அரசு தள்ளுபடி செய்த கடன் ரூ.6.66 லட்சம் கோடியாம்!

 

 

கடந்த 6 ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு பிஜேபி அரசு தள்ளுபடி செய்த கடன் ரூ.6.66 லட்சம் கோடி!

மோடி தலைமையில் பிஜேபி அரசு மத்தியில் ஆட்சியை பிடித்த 2014ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டுவரை வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை கடனாக பெற்று அதை திரும்ப செலுத்தாமல் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடியவர்களோடு சேர்த்து சுமார் 50 முதல் நிலை பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடன் தொகை மட்டும் ரூ.6.66 லட்சம் கோடியாம். இவர்கள் அனைவருமே மோடி அரசின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடன் வாங்கி கட்டாமல் இருக்கும் 50 பேரில் பட்டியலை வெளியிடுங்கள் என இதே கேள்வியை பாராளுமன்ற கூட்டத்தில் ராகுல்காந்தி எழுப்பிய போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

இப்போது கடன் தள்ளுபடி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து கொரானா பீதியை ஓரம் கட்டிவிட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு செப்டம்பர் வரை மத்திய அரசு ரூ.6.66 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்த விவகாரம் குறித்து
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், “கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாத முதல் 50 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது ஏன் என பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

போலித்தனம், ஏமாற்றுத்தனம், தப்பி ஓடுதல் ஆகியவற்றை ஊக்கப்படுத்துவதை மத்திய அரசு ஒரு கொள்கையாக வைத்திருக்கிறது. பிரதமர் பதில் அளிக்காதவரை ஏற்க முடியாது. மத்திய அரசின் தவறான முன்னுரிமைகள், நேர்மையற்ற நோக்கங்களைப் பிரதிபலிக்கிறது.
கரோனா வைரஸுக்கு எதிராக தேசம் போராடி வரும்போது, மாநிலங்களுக்கு வழங்கப் பணமில்லாமல் மத்திய அரசு இருக்கிறது. ஆனால், வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் வராக்கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளீர்கள்” எனத் தெரிவித்துள்ளார் என குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த விவகாரத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ராகுல் காந்தியும் தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.

இந்த 50 பேர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பரில் 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது பாஜக அரசு.

கொரானா சிக்கலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாமல் திண்டாடி வருகின்றனர். நாட்டு மக்களுக்கு நிவாரண நிதி உதவியை செய்ய துப்பு இல்லாத மோடி அரசாங்கம் பணக்காரர்களுக்கு மட்டும் வராக்கடனை தள்ளுபடி செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இதை மோடி அரசு உணருமா…அல்லது கமல்ஹாசன் குறிப்பிடும் பால்கனி அரசாகவே இருக்குமா.

451 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன