ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

தமிழகத்தில் மே 4ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்!

 

தமிழகத்தில் மே 4ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்!

ஒரு பக்கம் கொரானா அச்சுறுத்தல் இன்னொரு பக்கம் அக்னிக்கு முன்பே கடும் வெயில்.
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் வருகிற மே 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்குகிறது. தொடர்ந்து 24 நாட்கள் அதாவது வருகிற மே 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது.

இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் இந்த வெயிலின் தாக்கத்தை மக்கள் பெரும்பாலும் உணர மாட்டார்கள்.
காரணம் கொரானாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். வெளியில் செல்லும் சூழல் இல்லாததால் அக்னி தாக்கம் பெருசாக தெரியாது.

அதோடு தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்து உள்ளதும் வெயில் தாக்கத்தை குறைக்கும்.

590 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன