வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

OTT ரிலீசுக்கு ஆதரவாக ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் விதிகளை மாற்றிய கொரானா!

 

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் விதிகளை மாற்றிய கொரானா!

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மதிப்பு வாய்ந்த விருதுகளில் ஆஸ்கர் விருதும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விருது விழாவை உலகமே ஆவலோடு எதிர்நோக்கும். அதிலும் ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கும் அந்த படங்களுக்கும் உலகம் முழுக்க எப்போதும் தனி மவுசுதான்.

ஆஸ்கர் விருது பெரும் பட்டியலில் இடம் பெற ஒரு படம் பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்றால், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஏதாவது ஒரு திரையரங்கில் குறைந்தது 7 நாட்களாவது அந்த படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆஸ்கர் விருது விதி.

ஆனால், கொரானா பரவல் பீதி காரணமாக உலகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டு புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

அதிலும் உலகிலேயே அமெரிக்காதான் கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டதால் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகவில்லை.

அதே நேரம் OTT என அழைக்கப்படும் டிஜிட்டல் தளங்களில் பல படங்கள் வெளியாகி உள்ளது.

அதனால் டிஜிட்டல் தளங்களில் வெளியான படங்களையும் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதற்காக ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனைகளுக்கு பின் டிஜிட்டல் தளங்களில் (OTT) வெளியிடப்படும் படங்களும் 2021 ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதி பெறும் என ஆஸ்கர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் டிஜிட்டல் தளங்களில் (OTT) வெளியிடப்படும் படங்களும் 2021 ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது பொழுதுபோக்கு துறைகளில் இருக்கும் கலைஞர்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது.

560 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன