
தமிழகத்தில் கொரானா பரவல் கட்டுக்குள் உள்ளது முதலமைச்சர் பழனிச்சாமி
தமிழகத்தில் கொரானா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை மண்டலத்தில் தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
கொரானா தடுப்பு பணிகளில் தமிழகத்தின் தற்போதைய நிலவரம் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரானா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், குறுகலான தெருக்கள் மற்றும் மக்கள் நெருக்கத்தால் சென்னையில் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது.
மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா பரவுவதாக தெரிவித்த முதலமைச்சர், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய தன்னார்வலர்களை பயன்படுத்தலாம் என்றார்.
தடை செய்யப்பட்ட பகுதியில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட பகுதியில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் டோக்கன் முறையில் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், டோக்கனில் மக்கள் வரவேண்டிய நேரம் நாள் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
விவசாய பொருட்களுடன் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் மறிக்க கூடாது என்றும், விவசாயிகள் தங்கள் பணிகளை தொடர எவ்வித இடையூறும் இருக்க கூடாது .
மேலும் கொரானா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை மண்டலத்தில் அனைத்துவிதமான தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளும் செயல்பட மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கலாம் என தெரிவித்த முதலமைச்சர், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை.
உணவகங்களில் பார்சல் முறையில் மட்டுமே விற்பனை நடைபெற வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
