வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

ஊரடங்கு நீடிப்பா… மே 3ல் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

 

 

கொரானா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள போதிலும் கொரானா பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை.

நாளுக்கு நாள் கொரானா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மாநிலத்துக்கு மாநிலம் உயர்ந்து கொண்டே போகிறது.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிருஷ்ணகிரியைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 3ம் தேதியுடன் முடிகிறது. ஆனால் கொரானா தாக்கம் குறையாமல் இருக்கிறது.

இதனால் ஊரடங்கு  மேலும் நீட்டிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் இருக்குமா? என்று மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

ஏற்கனவே, மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடியுடனான வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியைத் தரவேண்டும் என கோரிக்கை வைக்கபட்டது. ஊரடங்கு நீடிப்பு குறித்து பெரிய அழுத்தம் கொடுத்ததாக தகவல் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன