புதன்கிழமை, ஜூலை 29
Shadow

பிரான்ஸ் நாட்டில் ஜூலை 24வரை ஊரடங்கு நீடிப்பு!

 

 

பிரான்ஸ் நாட்டில் ஜூலை 24வரை ஊரடங்கு நீடிப்பு!

உலகையே உலுக்கி வரும் கொரானா வைரஸ் இதுவரை 210 நாடுகளுக்கு பரவி பல லட்சம் மக்களை பாதித்து உள்ளது. தினம் தினம் பல்லாயிரக்கணக்கான மக்களை பலி வாங்கி வருகிறது.

ஐரோப்பிய நாடான பிரான்சில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 346 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 ஆயிரத்து 594 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நாள் முதல் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், கொரானாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை மாதம் 24-ம்  வரை நீட்டித்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான எல்லைகளும் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து மூடி இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகிலேயே ஜூலைவரை ஊரடங்கை நீடித்த முதல் நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

636 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன