ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பகிர்ந்து கொரானா நிவாரண நிதி திரட்டும் HDFC வங்கி!

 

 

ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பகிர்ந்து கொரானா நிவாரண நிதி திரட்டும் HDFC வங்கி!

கொரானா வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். ஹம் ஹர் நஹி மானங்கே என்கிற பாடலை, பாடலாசிரியர் பிரசூன் ஜோஷியுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்

இப்பாடலுக்கு இசையமைத்ததோடு சில வரிகளையும் ரகுமான் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பாடலில் இந்தியாவிலுள்ள பிரபல இசைக்கலைஞர்கள் சிவமணி, மோகித் செளகான், மிகா சிங், ஜொனிடா காந்தி, நீத்தி மோகன், ஜாவத் அலி, சித் ஸ்ரீராம், சுருதி ஹாசன், ஷாஷா திருப்பதி, கதிஜா ரகுமான் போன்றோர் இணைந்து பாடியுள்ளனர்.  இந்தப் பாடலை HDFC வங்கி வெளியிட்டுள்ளது.

இந்தப் பாடல் சமூகவலைத் தளங்களில் ஒவ்வொருமுறை பகிரப்படும்போதும் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 500 வழங்குவதாக HDFC வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 150 கோடியை  HDFC வங்கி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

536 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன