
சென்னை மாநகராட்சியின் நோக்கம் 50 ஆயிரம் படுக்கைகள் உருவாக்க பகுதிகளை அணுகவுள்ளோம். இதுவரை 4000 படுக்கை பகுதிகள் தயாராக உள்ளது. மாநகராட்சி பள்ளிகள், அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என தெரிவித்துள்ளோம்.
மொத்தம் 50000 ஆயிரத்தில் முதல் 25000 படுக்கைகளுக்கு அரசு உயர் கல்வி நிறுவனங்கள், அடுத்து 25000 அரசுப்பள்ளிகள் பின்னர் தனியார் பள்ளிகள் என படிப்படியாக செல்ல உள்ளோம். அடுத்து சென்னையில் உள்ள கல்யாண மண்டபங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சென்னையில் 747 கல்யாண மண்டபங்கள் உள்ளது. அவை அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தேசிய பேரிடர் சட்டத்தின்கீழ் அதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது.
அதை அவர்களுக்கு தெரிவித்து விட்டோம், ஏனென்றால் இது தேசிய அவசர நிலை காலம். இப்ப கல்யாண மண்டபம் கிடைத்தவுடன் முதல்வேலையாக அங்கு படுக்கைகள் சேமிக்கத்தொடங்கி விடுவோம், 50 ஆயிரம் படுக்கைகள் ஒரு மாதத்துக்குள் போட்டுவிடுவோம். இப்போதைக்கு 4000 உள்ளது. அடுத்த வாரம் 10 ஆயிரம், ஒரு மாதத்துக்குள் 50 ஆயிரம் படுக்கைகள் தயாராகிவிடும்.

எங்கள் பணி படுக்கை வசதிகள் தயார் செய்து கொடுத்துவிடுவோம், கழிப்பறை, தங்குமிடம், உணவு இதை தயார் செய்து கொடுப்பது எங்கள் முதல் வேலை. பின்னர் பொது சுகாதாரத்துறை அங்கு அவர்களது வேலையை பார்த்துக் கொள்வார்கள்’. – சென்னை கார்ப்பரேசன் கமிஷனர் சொன்னது
