ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரானா இல்லை!

 

 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரானா இல்லை!

தமிழகத்தில் கொரானா பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது. கொரானா பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 379 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 30.

37 மாவட்டங்களை கொண்ட தமிழகத்தில் 3 மாவட்டங்கள் கொரானாவில் இருந்து முற்றிலும் மீண்டுள்ளது. ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை. அதனால் 4 மாவட்டத்தில் கொரானா முற்றிலும் இல்லை.

நீலகிரி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டிருந்தது. சிகிச்சைக்கு பின் அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நீலகிரி கொரானா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதே போல ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்களில் 69 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். ஒருவர் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்து விட்டார். இதனால் ஈரோடு கொரானா இல்லாத இடமாக மாறியுள்ளது.

அடுத்ததாக தூத்துக்குடியில் 27 பேருக்கு வைரஸ் பரவியிருந்தது. சிகிச்சைக்கு பின் 26 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஒரு நபர் உயிரிழந்தார். அங்கு புதிதாக யாருக்கும் வைரஸ் உறுதி செய்யப்படவில்லை. இதனால் தூத்துக்குடி வைரஸ் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

சென்னையில் தான் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.

694 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன