ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

கொரானா பரவலின் தீவிரம் அதிகரிக்கும் போது மதுக்கடைகளை திறப்பது ஆபத்தானது – கோடங்கி

 

கொரானா பரவலின் தீவிரம் அதிகரிக்கும் போது மதுக்கடைகளை திறப்பது ஆபத்தானது – கோடங்கி

உலகளாவிய முறையில் மக்களை கடந்த 2 மாதங்களாக வீட்டுக்குள் முடக்கி போட்டிருக்கும் கொரானா வைரஸ் பரவலை தடுக்க தொடர்ந்து பல்வேறு வகையான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கொரானா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அதோடு தலை நகரமான சென்னை அதிகப்படியான பாதிப்பை தினமும் சந்திக்கிறது. நோயாளிகள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் வேலை வாய்ப்பை இழந்து வறுமையில் இருந்தாலும் மதுபான கடைகள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான அடித்தட்டு மக்களுக்கு பெறும் ஆறுதலாக இருந்தது.

கொரானா தாக்கம் குறைந்து முற்றிலும் ஒழிக்கப்படும் அதே நேரம் மூடப்பட்ட மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி பூரண மதுவிலக்கு அமல் படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதை எல்லாம் மனதில் வைக்காமல் வருமானம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கொரானா கொடூர தாக்கம் குறைவதற்கு முன் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் 7ம் தேதி முதல் திறக்க உத்தரவிட்டது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வருமானம் இன்றி மக்கள் கடும் அவதி பட்டு வருகிறார்கள்.

இந்த சூழலிலும் அவர்ளது குடும்பங்களில் இருந்த ஒரே ஆறுதல் மதுக்கடைகளை அரசு மூடி வைத்திருந்ததுதான்.

இந்த ஆறுதலை தட்டிப் பறிக்கும் விதமாக மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது.

அரசின் இந்த முடிவு ஆபத்தைக் அதிகரிக்கும். இதற்கு காரணம் மதுக்கடைக்கு போகும் மக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற மாட்டார்கள். சுத்தமாக இருப்பதும் கஷ்டமே. மதுக்கடைகளுக்கு போய் மதுவுடன் வைரசையும் வாங்கி வரும் ஆபத்து அதிகம்

மக்களை காக்க வேண்டும் என்கிற அக்கறை கொண்ட அரசாக இருந்தால் உடனடியாக மதுக்கடைகளை திறக்கும் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

600 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன