செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு!

 

 

சினிமா போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அனுமதி கேட்டு அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் மனு!

கொரானாவால் முடங்கி இருக்கும் திரைத்துறையில் ஷூட்டிங் முடிந்த படங்களுக்கு போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சுமார் 500 கோடிக்கு மேல் இப்படி ஷூட்டிங் முடிந்த படங்களில் பணம் முடங்கி உள்ளது. இந்த சூழலில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்து வைத்தால் படம் ரிலீஸ் செய்ய தயாராக இருக்க முடியும் என்பதால் இந்த கோரிக்கை கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதே போல டிவி சீரியல்களின் ஷூட்டிங்கை நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் என சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சுஜாதா விஜயகுமார், குஷ்பு இருவரும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு கொடுத்தனர்.

680 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன