
கோத்தகிரியில் குடும்பத்துடன் தனிமைபடுத்தப்பட்ட ராதாரவி! ஊரடங்கை மீறினாரா?
தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது.
அதிலும் குறிப்பாக சென்னையில் தினம் தினம் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.
இந்த சூழலில் தமிழக்த்திலேயே சென்னை தான் கருஞ்சிவப்பு எச்சரிக்கை வளையத்திற்குள் உள்ளது.
ஊரடங்கில் சிக்கி சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு இ.பாஸ் வழங்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்லது நெருங்கிய உறவினர் மரணம் இதற்கு மட்டுமே பெரும்பாலான இ.பாஸ் வழஙகப்படுகிறது.
அப்படியே அவர்கள் இந்த பாஸ் மூலமாக அவர்கள் செல்லும் ஊர்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள்.

சென்னையில் இருந்து செல்பவர்கள் கடுமையான பரிசோதனைக்கு பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த சூழலில் நடிகர் ராதாரவி தனது குடும்ப உறுப்பினர்கள் 8 பேருடன் சென்னையில் இருந்து கோத்தகிரி சென்றுள்ளார்.
சென்னையில் இ.பாஸ் பெற்று சென்ற போதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போது கோடை வெயிலை எதிர்கொள்ள விரும்பாமல் உல்லாசமாக இருக்க ராதாரவி கோத்தகிரி சென்றுள்ளார் இது அப்பட்டமான விதி மீறல் என்றும், அதோடு வைரஸ் பரவலில் மிக அபாய பகுதியாக உள்ள சென்னையில் இருந்து வைரஸ் கட்டுக்குள் உள்ள பச்சை மண்டல பகுதியான கோத்தகிரிக்கு ராதாரவி உட்பட 8 பேர் வந்துள்ளது அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
அதோடு, எந்த விதமான முக கவசமும் அணியாமல் ஊட்டி கலெக்டரை சந்தித்து சமூக இடைவெளியை மருந்துக்கு கூட பின்பற்றாமல் ராதாரவி நடந்து கொண்ட விதமும், கொரானா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாக ஊட்டி கலெக்டரை ராதாரவி பாராட்டியதாக வெளியான தகவலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராதாரவி இப்போது பாஜகவில் ஒரு உறுப்பினர். அவரது சொந்த ஊர் கோத்தகிரியோ, ஊட்டியே இல்லை. அப்படி இருக்க ஊரடங்கு உத்தரவை மீறி வழக்கம்போல கோடையில் குளுகுளு ஊட்டிக்கு ராதாரவி உல்லாச பயணம் போயிருக்கிறார் என்ற சர்ச்சை பொது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
இந்த சர்ச்சையின் காரணமாக ஊட்டி சுகாதார துறை அவசரமாக ராதாரவி தங்கி உள்ள பங்களா வாசலில் கொரானா தனிமைப்படுத்தல் ஸ்டிக்க்ரை ஒட்டி ராதாரவி அவரது குடும்பத்தினரை தனிமைபடுத்தி உள்ளனர்.
ஊட்டியில் கொரானா பரவல் பரிசோதனையில் கண்டறியபட்டால் அதற்கு இந்த சம்பவம் கூட காரணமாக இருக்கலாம்.
– கோடங்கி
