புதன்கிழமை, மே 15
Shadow

ஊரடங்கில் மாஸ்க் அணியாமல் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஹீரோயின்!

 

 

ஊரடங்கில் மாஸ்க் அணியாமல் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஹீரோயின்!

ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு பழமொழி உண்டு… இத மெய்ப்பிக்கிற மாதிரி உலகமே கொரானா வைரஸ் தாக்கத்துல ஊரடங்கு போட்டு மக்கள் வீடடங்கி இருக்காங்க… இந்த நேரத்துல முகத்துல மாஸ்க் கூட போடாம நடு ரோட்டுல சிரிச்சிகிட்டே டான்ஸ் ஆடுனா… அதுவும் தான் ஆடுனது பத்தாதுன்னு காதல் புருசனையும் ஆட வைச்சா…
இந்த டான்ஸ் போட்டது ஹீரோயின் ஸ்ரேயா தான்.

பிசியாக இருக்கும் போதே வெளிநாட்டு பிரபல தொழிலதிபர் ஆன்ட்ரே கோஷ்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா.

திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார்.

ஊரடங்கு நாட்களில் எல்லா நடிகைகளையும் போல கவர்ச்சியான உடையில் பால்கனி வணக்கம் சொல்லி படம் வெளியிட்டார்… சமையல் செய்வது போல படம் வெளியிட்டார்.

இப்போது உலகின் பல நாடுகளில் ஊரடங்கில் தளர்வுகள் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரேயாவும் அவரது கணவரும் பார்சிலோனா நகரில் நடுரோட்டில் மாஸ்க் எதுவும் அணியாமல் டான்ஸ் ஆடி அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் மாஸ்டர்களுக்கு நன்றிகூறி வெளியிட்டுள்ளார். பார்சிலோனாவில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நடுரோட்டில் கணவருடன் ஸ்ரேயா டான்ஸ் ஆடியது சமூக … பொது வெளியில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இப்ப செய்தியின் முதல் பாராவ மறுபடியும் படிங்க..!

 

394 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன