திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

மருத்துவமனைக்கு போன கர்ப்பிணியை வழிமறித்து சங்கரன்கோயில் போலீஸ் அத்துமீறல் – காட்டமாக வீடியோ வெளியிட்ட இராணுவவீரர்

 

 

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரியும் ஒருவர் வெளியிட்ட வீடியோ சங்கரன்கோவில் காவல்துறையினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரணாபுரம் கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் CRPF வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது தந்தை மற்றும் 4 மாத கர்ப்பிணியான தங்கை ஆகிய இருவரும் ரவிக்குமாருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் சங்கரன்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் வாகன சோதனையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் ரவிக்குமார் தந்தை மற்றும் அவரது தங்கை சென்ற வாகனத்தை நிறுத்தி கர்ப்பிணியான பெண் என்றும் பாராமல் அரை மணி நேரம் காக்க வைத்து திருடனிடம் விசாரணை செய்வதை போல் நடந்ததாகவும் குற்றம் சாட்டும் CRPF வீரர் ரவிக்குமார்

இது முக்கியமாக சங்கரன்கோவில் காவல்துறைக்கு மட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சங்கரன்கோவில் காவல்துறையினரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

1,479 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன