வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

கொரானாவுக்கு தடுப்பூசி ரெடியாம் வங்க தேச மருத்துவ குழு அறிவிப்பு!

 

கொரானாவுக்கு தடுப்பூசி ரெடியாம் வங்க தேச மருத்துவ குழு அறிவிப்பு!

உலகம் முழுதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரானா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முறை தொடங்கி உள்ளது. இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், கொரோனா 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டறிந்திருப்பதாக வங்கதேச மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த தரெக் ஆலம் என்ற மருத்துவரின்  தலைமையிலான குழு கொரானா குறித்து ஆய்வு செய்து வந்தனர். இவர்கள் மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின் மற்றும் டாக்ஸிசைக்ளின் ஆகிய மருந்துகளை கலந்து, கொரானா நோயாளிகளுக்கு அளித்து சோதித்துள்ளனர்.

60 பேரிடம் இந்த சோதனை நடந்துள்ளது. 60 பேரும் வெற்றிகரமாக கொரானாவில் இருந்து மீண்டுள்ளனர். மருந்து கொடுத்த 4 நாட்களில் குணமடைந்திருப்பதாகவும், 4வது நாளில் மேற்கொள்ளப்பட்ட கொரானா பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று முடிவுகள் கிடைத்திருப்பதாகவும் மருத்துவ குழு கூறி உள்ளது.  இந்த மருந்து கலவையை பயன்படுத்தியதால், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கு மருத்துவக் குழு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒரு வேளை இந்த தடுப்பூசி சர்வதேச அங்கீகாரம் பெற்றால் உலகளாவிய அச்சம் போக்கப்படும்.

598 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன