சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

இன்று முதல் ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு தொடங்கும்!

 

இன்று முதல் ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு தொடங்கும்!

இந்தியா முழுவதும் கொரானா பாதிப்பு காரணமாக ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 200 ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரெயில்களுக்கு ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று 22.5.2020 முதல் இயங்கவும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல முதன்மை தலைமை வர்த்தக மேலாளருக்கு ரெயில்வே வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று முதல் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தந்த மண்டலங்களில் எத்தனை டிக்கெட் கவுண்ட்டர்கள் திறந்திருக்க வேண்டும் என முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் சமூக இடைவெளி விட்டு நிற்கவும், மேலும் சுகாதார விதிமுறைகளையும் கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

459 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன