புதன்கிழமை, செப்டம்பர் 23
Shadow

மீண்டும் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் களமிறங்கும் விஷால் டீம்!

 

 

மீண்டும் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் களமிறங்கும் விஷால் டீம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதற்கு முன்பே சங்கத்தை அரசு தன் வசப்படுத்தியது.

தனி அதிகாரி நியமிக்கப்பட்ட நிலையில் சங்க தேர்தலை நடத்த உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் ஜூன் மாதம் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியான நிலையில் கொரானா ஊரடங்கு அமலுக்கு வந்தது.

அதே நேரம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3 அணிகள் போட்டியிட அறிவிப்புகள் வந்தது. ஏற்கனவே பதவியில் இருந்த விஷால் தலைமையிலான அணி எந்த கருத்தையும் சொல்லாமல் அமைதி காத்தது.

இந்த சூழலில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தலை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இப்போது விஷால் தலைமையிலான அணியில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் மீண்டும் சங்க தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

அதோடு, மீண்டும் தலைவர் பதவியில் விஷால் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

விஷால் டீம் மீண்டும் களமிறங்க முடிவு செய்ததால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணிகளில் பல மாற்றங்கள் நடக்கலாம் என தெரிகிறது.

இந்த தகவல் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

– கோடங்கி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன