
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள துலா நகர அரசு ஆஸ்பத்திரியில் கொரானா வைரஸ் வார்டில் பணி புரிந்த இளம் நர்ஸ் உள்ளாடைகள் மட்டும் அணிந்து அதற்கு மேல் கவச உடை அணிந்து பணியாற்றிய விவகாரம் உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஷியாவில் இப்போது கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது.இதன் காரணமாக அந்த இளம் நர்ஸ் ‘டூபீஸ்’ நீச்சல் உடை அணிந்து, அதன் மேல் கொரானா வைரஸ் வார்டில் பணிபுரிவதற்கு உரிய பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார்.
அவர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. சுகாதாரம் மற்றும் தோற்றத்துக்கு இணங்க நர்சுகள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. நர்ஸ் டூ பீஸ் உடை அணிந்து பணியாற்றிய ஆண்கள் வார்டில் எந்த புகாரும் வராததால் நர்ஸ் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்தது.அவரது சக செவிலியர்களூம் மருத்துவர்களும் நடியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
உள்ளாடை தெரியும் விதத்தில் பாதுகாப்பு உடை அணிந்து பணி செய்ததால் பரபரப்பை ஏற்படுத்திய நர்ஸ் நடியா ( வயது 23) அவரது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சர்ச்சையிலும் அவருக்கு ஒரு நன்மையும் ஏற்பட்டுள்ளது.
இப்போது பிரபல உள்ளாடை நிறுவனமான மிஸ் எக்ஸ் லிங்கரி என்ற நிறுனத்தின் தலைவரான அனஸ்தேசியா யகுஷேவா செவிலியர் நடியா எங்கள் நிறுவன மாடலாக வேண்டும் என்று விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அவருக்காக பல புதிய தயாரிப்புகளை உருவாக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ள அவர், எதிர் காலத்தில் வருடாந்திர ஒப்பந்தம் ஒன்றையும் அவருடன் செய்து கொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.
வெயில் படுத்திய இம்சையில் தப்பிக்க அணிந்த டூ பீஸ் உடையால் நர்ஸ் மாடலிங் அழகியாகும் வாய்ப்பு கிடைத்தது.
