ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

உலகம் முழுதும் கொரானா பாதிப்பு 54 லட்சத்தை கடந்து விட்டது… 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

 

உலகம் முழுதும் கொரானா பாதிப்பு 54 லட்சத்தை கடந்து விட்டது… 22 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினார். பலி எண்ணிக்கை 3.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரானா வைரஸ் இப்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்கம் காரணமாக பல லட்சம் மனிதர்களை பலி வாங்கி வருகிறது.

 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது.

அதே நேரம் வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரானாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 562-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரானா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரானா வைரசால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடமும், பிரேசில் இரண்டாவது இடமும், ரஷ்யா மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியா 11வது இடத்தில் உள்ளது.

974 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன