சனிக்கிழமை, அக்டோபர் 10
Shadow

சிங்கம்பட்டி ஜமீன் கடைசி ராஜா மரணம்!

 

 

மன்னர் to LIC ஏஜெண்டான சிங்கம்பட்டி ஜமீன் கடைசி ராஜா மரணம்!

நாடு சுதந்திரம் அடைந்த பின் மன்னர்கள், அரசர்கள், ராஜாக்கள், இளவரசர், இளவரசி என்பதை எல்லாம் வரலாற்று பதிவுகளில் மட்டுமே படித்து வருகிறோம்.

அதையும் மீறி சம காலத்தில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் தகவல்களையும், வளைகுடா மன்னர் குடும்பங்கள் பற்றியும் அறிந்த நமக்கு நம்மூரில் இருக்கும் ராஜாக்கள் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் விட்டது தான் சோகம்.
அப்படி நம்மூரில் இருந்த கடைசி ராஜாதான் சிங்கம்பட்டி ஜமீன் ராஜா டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி ஜமீனை ஆண்டுவந்தவர் ராஜா டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா. தமிழகத்தில் மன்னராட்சியில் ராஜாவாக முறைப்படி பட்டம் சூட்டிக் கொண்டவர்களில் மிஞ்சி இருந்த ஒரே ஒரு ராஜா இவர் தான். தமிழ்நாட்டில் மன்னராட்சி காலத்தில் இயங்கி வந்த 72 பாளையங்களில் சிங்கம்பட்டி ஜமீன் முக்கியமான பாளையமாக விளங்கியது. அந்த ஜமீனின் 32வது மகாராஜாவாக பட்டம் சூட்டப்பட்டவர் தான் இந்த ராஜா டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா. இவர் மன்னர் ஆக இருந்தாலும் சமூக சேவைகளில் அதிக அக்கறை காட்டி வந்த அவர் அனைத்து மக்களுடனும் இயல்பாக பழகக்கூடியவர்.

மன்னராட்சி ஒழிந்து நாடு சுதந்திரம் அடைந்த பின் இருந்த கடைசி ராஜா இவர்தான்.

சிங்கம்பட்டியின் 31-வது ராஜாவாக டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதிக்கு மூடி சூட்டினார்கள். அப்போது அவருக்கு வெறும் மூன்றரை வயது தான். முருகதாஸ் தீர்த்தபதி தான் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார். இவருக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

ராஜாவாக இருந்தாலும் சமஸ்தானம் இல்லாமல் போனதால் சாத்தநாதன் டிரேடர்ஸ் என்ற கம்பெனி நடத்தி வந்தார். . அதோடு, எல்.ஐ.சி., ஏஜெண்ட் ஆகவும் இருந்தார்.


ஆன்மீக சொற்பொழிவுகளிலும் கலந்து கொண்டு பேசுவார். வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நான் ராஜா உடை அணிந்து சொரிமுத்து அய்யனார் கோயில் விசேஷத்தில் கலந்து கொள்வார்.

மன்னர் ஆக இருந்தாலும் மக்களிடம் மிக எளிமையாக பழகுபவர் என்கிறார்கள் இவரிடம் பழகிய பலர்.

நமது காலத்தில் வாழ்ந்த கடைசி மன்னரும் மறைந்தாலும் வரலாற்றில் எப்போதும் இவருக்கென தனி இடம் உண்டு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன