
ஊரடங்கு விதி மீறல் 7.63 கோடி அபராதம் வசூல்!
கொரானா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 31ந்தேதி வரை அமலில் இருக்கும். தமிழகத்தில் உள்ள 144 தடை உத்தரவை மீறி பல இடங்களில் மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 26 ஆயிரத்து 507 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4 லட்சத்து 94 ஆயிரத்து 770 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ.7.63 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை கடந்த ஏப்ரல் 16ந்தேதி முதல் திரும்ப ஒப்படைக்கவ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கில் பல இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் அபராதம் வசூல் மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது குறிப்பிடதக்கது.
