வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

55 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டதா “தலைவி” !?

 

 

55 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டதா “தலைவி” !

கொரானா பரவல் பரபரப்பிலும் முன்னாள் முதல்வர் ஜெ., தொடர்பான செய்திகள் எது வந்தாலும் பெரும் வைரல் ஆகி வரும் நேரம் இது.

காரணம் அவருக்கு சொந்தமான சொத்துக்களை யார் உரிமை கொள்வது என்ற வழக்கின் தீர்ப்பு வேறு வந்துள்ளது.

இந்த நேரத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரமாண்டமான பொருள் செலவில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் ரூ.55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே OTT என்று சொல்லப்படும் டிஜிட்டல் ரிலீசுக்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டி வரும் சூழலில் தலைவி டிஜிட்டல் உரிமை 55 கோடிக்கு விற்கபட்டதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பலகோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த தலைவி படம் தியேட்டரில் வெளியான பிறகு தான் டிஜிட்டலில் ரிலீஸ் ஆகும் என்றும் கூறியிருக்கிறார் கங்கனா.

998 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன